Advertisement

திரையுலகில் இருந்து விலகுவதாக நடிகை சனாகான் அறிவிப்பு

By: Monisha Fri, 09 Oct 2020 5:40:03 PM

திரையுலகில் இருந்து விலகுவதாக நடிகை சனாகான் அறிவிப்பு

திரையுலகில் இருந்து விலகுவதாக நடிகை சனாகான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சிம்பு நடித்த சிலம்பாட்டம் மற்றும் தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் மற்றும் விஷாலின் அயோக்யா உள்பட பல தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்தவர் நடிகை சனாகான். இவரது நடிப்பில் தற்போது 'Tom, Dick and Harry 2' என்ற இந்தி படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திடீரென தான் திரையுலகில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை சனாகான் அறிவித்துள்ளார்.

social website,actress sanakhan,service,tamil movie ,சமூக வலைதளம்,நடிகை சனாகான்,சேவை,தமிழ்ப்படம்

மனித குலத்திற்கு சேவை செய்யப்போவதாகவும், தன்னை படைத்தவனின் கட்டளையை பின்பற்றப் போவதாகவும், அந்த பதிப்பில் குறிப்பிட்டு உள்ளார்

எனவேதான் திரையுலகில் இருந்து தான் விலகுவதாக முடிவு செய்து விட்டதால் இனிமேல் சினிமா சம்பந்தப்பட்ட கேள்வியை தன்னிடம் யாரும் கேட்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். திரையுலகில் இருந்து திடீரென விலகுவதாக சனாகான் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :