Advertisement

நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட அனிகா!

By: Monisha Fri, 27 Nov 2020 4:12:40 PM

நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட அனிகா!

குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி அனிகா தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தல அஜித் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பேபி அனிகா சுரேந்திரன். இவர் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களை பதிவு செய்து, நாயகியாக புரமோஷன் ஆக முயற்சித்து வந்தார். அவரது முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.

anika,telugu,heroine,instagram,photo ,அனிகா,தெலுங்கு,நாயகி,இன்ஸ்டாகிராம்,புகைப்படம்

அனிகா சுரேந்திரன் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் கப்பேல்ல. அன்னா பென், ஸ்ரீநாத் பாசி, ரோஷன் மாத்யூ உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முகமது முஸ்தபா இயக்கியிருந்தார்.

இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பதும் மலையாளத்தில் இயக்கிய முகம்மது முஸ்தபா தெலுங்கிலும் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அன்னாபென் நடித்த முக்கிய வேடத்தில் அனிகா சுரேந்திரன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Tags :
|
|