Advertisement

ரியோவை கடுப்பேத்திய அனிதா... வேடிக்கை பார்க்கும் ஹவுஸ்மேட்ஸ்!

By: Monisha Mon, 14 Dec 2020 4:33:44 PM

ரியோவை கடுப்பேத்திய அனிதா... வேடிக்கை பார்க்கும் ஹவுஸ்மேட்ஸ்!

ஒரே ஒரு வாரம் கேப்டனாக இருந்த அனிதா அர்ச்சனாவின் அன்பு குரூப்பை தூள் தூளாக உடைத்துவிட்டார். ஏற்கனவே ரமேஷ், நிஷாவை வெளியேற்றிவிட்ட நிலையில் தற்போது அனிதாவின் அடுத்த டார்கெட் ரியோ மீது திரும்பியுள்ளது.

நாமினேஷனின் போது ரியோ தன்னை பற்றி கூறிய ஒரு கருத்துக்கு அனிதா விளக்கம் கேட்கிறார். நாமினேஷனின்போது கூறியதை என்னிடம் நேரடியாக கேட்டிருக்கலாமே, நாமினேஷனின்போது கேட்டால் நான் பதில் சொல்ல மாட்டேன் என்ற நினைப்பா? என்று கேட்க, நான் உன்னைத்தான் கூறினேன், நேரடியாகத்தான் கூறினேன் என்று ரியோ சமாளித்து அங்கிருந்து விலக முயற்சித்தார்.

rio,anita,housemates,fight,courage ,ரியோ,அனிதா, ஹவுஸ்மேட்ஸ்,சண்டை,தைரியம்

அப்போது அனிதா, 'ஏன் தைரியம் இல்லாமல் போறிங்க' என உசுப்பேத்த, உடனே கடுப்பான ரியோ, 'யாருக்கு தைரியம் இல்லை, நான் என்ன வீட்டைவிட்டா வெளியே போயிட்டேன்' என்று கத்த, அதற்கு அனிதா, 'ஏன் இப்ப கத்துறீங்க' என்று அமைதியாக கேட்கிறார்.

இருப்பினும் கோபம் அடங்காத ரியோ, 'இனிமே தைரியம் இல்லைன்னு சொல்ர வேலையெல்லாம் வச்சுக்கிடவேண்டாம், பாத்து பேசுங்க' என்று கூறுகிறார். வழக்கம்போல் இந்த சண்டையை மற்ற ஹவுஸ்மேட்ஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Tags :
|
|
|