Advertisement

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அனிதா வெளியேற்றம்?

By: Nagaraj Sat, 26 Dec 2020 3:20:07 PM

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அனிதா வெளியேற்றம்?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது அனிதா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அனுதினமும் தன்னுடைய சுவாரஸ்யத்தை குறைய விடாமல் மக்களை அதன்பால் ஈர்த்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள ஒவ்வொரு போட்டியாளரும் மக்களின் மத்தியில் நன்கு பிரபலமாகிவிட்டனர் என்றே கூறலாம்.

மற்ற சீசன்களை போல் இந்த சீசனில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு காதல் டிராக் அமையவில்லை என்றாலும், ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் எழும் சண்டையே இந்த சீசன் மக்களிடையே தாறுமாறாக ரீச் ஆகிவிட்டது.

மேலும் வாரா வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு அனிதா சம்பத் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அனிதாவுக்கு பிறரை குறை கூறுவதே முக்கிய வேலை. கடந்த வாரத்தில் ஷிவானி பாலாஜியுடன் பேசும்போது சத்தமாக பேசினார்.

anita,big boss house,eviction this week,fans ,அனிதா, பிக்பாஸ் வீடு, இந்த வாரம் எவிக்சன், ரசிகர்கள்

அதனால் தனக்கு உடல்நிலை பாதிக்கும் என்று குறை கூறிய அனிதா கடந்த 2 நாட்களில் அதிக டெசிபல் சத்தத்தில் உற்சாகமாக சத்தமிட்டார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்காதா என்கின்றனர் ரசிகர்கள். இப்படி அடுத்தவர்களை குறை கூறியே வீட்டில் நாட்களை ஓட்டி வரும் அனிதா மீது ரசிகர்களுக்கு செம வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுகிறார்.

அந்த வகையில்தான் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் ஷெட்டி, சுசித்ரா, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா, சம்யுக்தா ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும் இந்த வாரம் முழுவதும் அனிதா சண்டை செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்ததால், அவர் மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சரசரவென்று குறைந்து விட்டது. எனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அனிதா வெளியே போய் விடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

வீட்டில் நேர்மையாக விளையாடும் ஆரிக்கு இந்த முறை கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல ஓட்டுகள் விழுந்து இருப்பதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் எட்டாத உயரத்தை தொட்டு விட்டார் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

Tags :
|