Advertisement

பிக்பாஸ் வீட்டில் மோதிக் கொள்ள போகும் அர்ச்சனா, பாலாஜி

By: Nagaraj Tue, 27 Oct 2020 9:17:15 PM

பிக்பாஸ் வீட்டில் மோதிக் கொள்ள போகும் அர்ச்சனா, பாலாஜி

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவை, பாலாஜி சண்டையிட்டு சீண்டுவது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் அர்ச்சனாவை பாலாஜி சீண்டியதாக தெரிகிறது. அடுத்த வாரம் முழுக்க அம்மியில் அரைக்க விடப்போவதாக பாலாஜி சொன்னதால் கடுப்பான அர்ச்சனா அந்த பிரச்சனையை மற்ற ஹவுஸ்மேட்டுகளிடம் கூறி நியாயம் கேட்கிறார்.

இதை தொடர்ந்து ரியோ, நிஷா, வேல் முருகன் உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ் ஒன்றிணைந்து பாலாஜியை கட்டம் கட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக அர்ச்சனாவை தொடர்ந்து கட்டம் கட்டுகிறார் பாலாஜி என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|