Advertisement

ஆரியின் புகழ் உச்சத்தை தொடுகிறது; ரசிகர்கள் வெகுவாக பாராட்டு

By: Nagaraj Thu, 31 Dec 2020 2:24:56 PM

ஆரியின் புகழ் உச்சத்தை தொடுகிறது; ரசிகர்கள் வெகுவாக பாராட்டு

பிக்பாஸ் ஆரியை மக்களுக்கு அதிகளவில் பிடிக்க காரணம் உள்ளது. அதற்கு உதாரணம் நேற்று பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவம்தான்.

பிக் பாஸ் திடீரென ஹவுஸ்மேட்கள் அனைவரையும் ஃப்ரீஸ் செய்ய சொன்னதும், குனிந்தபடியே கேபி ஃப்ரீஸ் ஆனார். அவருடைய டாப்ஸ் தூக்கி பின் பக்கம் தெரிவதை மறைக்க உடனே ஆரி செய்த காரியம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்த சீசன் பிக் பாஸ் ஹீரோ என்றால் அது ஆரி அர்ஜுனன் தான். ஆரி அர்மியினர் மட்டுமின்றி, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா, ரம்யாவின் அம்மா, தம்பி, ரியோவின் மனைவி மற்றும் சோமசேகரின் தம்பி என அனைவருமே ஆரியை பற்றி பேசி சென்றனர்.

ari,kp,breeze task,praise,gentleman ,ஆரி, கேபி, ப்ரீஸ் டாஸ்க், பாராட்டு, ஜென்டில்மேன்

ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் தனக்கு பின்னால் தன்னை பற்றி புறம்பேசுவது கூட தெரியாமல், அவர்களின் குடும்பத்தினர் வரும்போது, மரியாதை கொடுப்பதிலும், சிரித்துக் கொண்டே வரவேற்பதிலும் ஆரிக்கு நிகர் அவர் தான். ஆரியின் குடும்பத்தினர் எப்போது வருவார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் அதிரடியாய் ஹவுஸ்மேட்களை ஃப்ரீஸ் செய்த நிலையில், கேபியின் குட்டியான டாப்ஸ் ரொம்பவே தூக்கிடுச்சு. அவரது பின் பக்க பகுதி எந்தவொரு கேமரா கண்ணுக்கும் விருந்தாகி விடக் கூடாது என்பதற்காக ஒரு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து உடனே ஆரி சமைக்கும் போது அணிந்து கொள்ளும் துணியை எடுத்து கேபி மீது போர்த்தினார். இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

அந்த காட்சியை வீடியோவாக கட் செய்து, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆரியின் ஆர்மியினர் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். மேலும், ஆரி ஒரு ட்ரூ ஜென்டில்மேன் என்றும் பாராட்டி வருகின்றனர்.

அர்ச்சனா வந்த புதிதிலேயே இந்த வீட்டில் இருக்கும் ஒரு ஆண் போட்டியாளர்களும் பெண்களை வேறு ஒரு கோணத்தில் ஒரு நொடி கூட பார்த்ததில்லை என பாராட்டு தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|