Advertisement

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மோதிக் கொள்ளும் பாலாஜி, சனம்

By: Nagaraj Mon, 02 Nov 2020 8:41:37 PM

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மோதிக் கொள்ளும் பாலாஜி, சனம்

மீண்டும் மோதிக் கொள்கின்றனர் பாலாஜி, சனம். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பாலா, ரம்யா, போன்றோர் ஆட்டத்தை லாவகமாக ஆட தொடங்கியுள்ளனர். குறிப்பாக பாலா யார்யாரை குறி வைத்து ஆட்டத்தை ஆடுகிறாரோ அவருக்கான மவுசு பிக் பாஸ் வீட்டில் குறைய தொடங்குகிறது.

அப்படி தான் ஆரி, வேல்முருகன், அர்ச்சனா, ரியோ என பலரும் செய்வதறியாது திக்குமுக்காடி வருகின்றனர்.

big boss,sanam,balaji,fight,promo video ,பிக்பாஸ், சனம், பாலாஜி, சண்டை, ப்ரோமோ வீடியோ

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ஷனம் – பாலா இடையே மோதல் வெடிக்கிறது அதில் ஷனம் சும்மா, சும்மா வார்த்தையை விடுறீங்க அறிவு இல்ல என்று கத்துகிறார்.

அப்போது பாலா அவரை நோக்கி வேகமாக செல்ல சம்யுக்தா மற்றும் சிலர் பிடித்து இழுக்கின்றனர். அதற்கு பாலா நீ எதுக்கு என்ன நைட் உதைச்ச? என்று கேட்க, இந்தா நீயும் உதைச்சிட்டு போயிட்டே இரு என்று சண்டை போடுகிறார் ஷனம். கடைசியில் இந்த வாரம் ஹவுஸ் கேப்டன் சம்யுக்தா, ஓகே போதும் என்று கத்தும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. நாளுக்குநாள் பிக்பாஸ் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.

Tags :
|
|
|