Advertisement

அடுத்த வார நாமினேஷன் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிக்பாஸ்!

By: Monisha Wed, 07 Oct 2020 12:26:19 PM

அடுத்த வார நாமினேஷன் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து நேற்றைய இரண்டாவது நாளும் முடிவடைந்த நிலையில் ஆரம்பமே அமர்க்களமாக உள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர்.

குறிப்பாக நேற்று போட்டியாளர்கள் தங்களுடைய அனுபவங்களையும், தங்களுக்கு ஏற்பட்ட சோகமான நிகழ்வுகளையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வேல்முருகனின் அனுபவங்கள் அனைவரின் கண்களை குளமாக்கியது. சனம்ஷெட்டி கூறிய விபத்து பின்னர் அதில் இருந்து மீண்டதும் உருக்கமாக இருந்தது.

big boss show,nomination,gabriella,rekha,sanamshetty ,பிக்பாஸ் நிகழ்ச்சி,நாமினேஷன் கேப்ரில்லா, ரேகா, சனம்ஷெட்டி

இந்த நிலையில் இன்று சற்று முன் வெளியான முதல் புரமோவில் போட்டியாளர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்ததாக பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார். அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள நிறையவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அடுத்த வார நாமினேஷன் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிக்பாஸ். அதில் கேப்ரில்லா, ரேகா, சனம்ஷெட்டி மற்றும் சம்யுக்தா ஆகிய நால்வர் அடுத்த வார நாமினேஷனில் உள்ளதாக பிக்பாஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து பார்வையாளர்களின் வாக்களிப்பின்படி இவர்கள் நால்வரில் ஒருவர் அடுத்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|