Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிக்பாஸ் டேனியல்

சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிக்பாஸ் டேனியல்

By: Nagaraj Tue, 08 Dec 2020 10:00:20 PM

சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிக்பாஸ் டேனியல்

சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் பிக்பாஸ் டேனியல் இணைந்துள்ளார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் அறியப்பட்டவர் டேனியல் ஆனி போப். அதன்பிறகு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் ரசிகர்களுடன் நெருக்கமானார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

daniel,conference,simbu,mahat,venkat prabhu,pondicherry ,டேனியல், மாநாடு, சிம்பு, மஹத், வெங்கட் பிரபு, புதுச்சேரி

சிம்புவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார் டேனியல்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இன்னொரு போட்டியாளரான மஹத்துடன் நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார் டேனியல். வெங்கட் பிரபு, சிம்பு இருவருமே மஹத்தின் நண்பர்கள் என்பதால், இந்தப்படத்திற்குள் டேனியலுக்கு எளிதாக வாய்ப்பு அதிகம் இருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.

Tags :
|
|
|