Advertisement

ட்ரீட் எங்கே? கமல்ஹாசனிடம் கேள்வி கேட்ட பிக்பாஸ்!

By: Monisha Sat, 07 Nov 2020 4:53:18 PM

ட்ரீட் எங்கே? கமல்ஹாசனிடம் கேள்வி கேட்ட பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல்ஹாசன் தோன்றும் நாட்கள் என்பதால் மற்ற நாட்களை விட கூடுதல் சுவராஸ்யமாக இருக்கும். அதிலும் இன்று கமல் தோன்றும் நாள் மட்டுமின்றி அவருடைய 66-வது பிறந்த நாள் என்பதால் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரோமோவில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பிக்பாஸ் தெரிவிக்கின்றார். அதற்கு நன்றி கூறிய கமல்ஹாசனிடம் 'ட்ரீட் எங்கே?' என்று பிக்பாஸ் கேட்டது.

kamal haasan,big boss show,birthday,treat,contestants ,கமல்ஹாசன்,பிக்பாஸ் நிகழ்ச்சி,பிறந்தநாள்,ட்ரீட்,போட்டியாளர்கள்

அதற்கு கமல்ஹாசன் அவர்கள் கூறுகையில், "நான் அனைவரையும் மரியாதையாகவும் சமமாகவும் நடத்த வேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து செய்வேன் என்றும் கூறும் உறுதிமொழியே அனைவருக்கும் கொடுக்கும் ட்ரீட்" என்று கூறினார்.

இதனை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுகின்றனர். அவர்களுக்கு கமல்ஹாசன் தனது நன்றி தெரிவிப்பதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|