Advertisement

கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரெய்லரை வெளியிடும் பிரபல நடிகர்கள்

By: Nagaraj Thu, 11 June 2020 5:57:09 PM

கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரெய்லரை வெளியிடும் பிரபல நடிகர்கள்

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் படத்தின் டிரெய்லரை மோகன்லால், தனுஷ், நானி ஆகியோர் வெளியிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பென்குயின். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

keerthi suresh,film,trailer,dhanush,mohanlal,nani ,கீர்த்திசுரேஷ், படம், டிரெய்லர், தனுஷ், மோகன்லால், நானி

இந்தப் படத்தின் டீசர் 2 நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். தெலுங்கு டிரெய்லரை நானியும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட இருக்கிறார்கள். கீர்த்தி சுரேசிற்காக மூன்று மொழியிலும் பிரபலமான நடிகர்கள் டிரெய்லரை வெளியிடுகின்றனர். ஊரடங்கு காரணத்தால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகிறது.

Tags :
|