Advertisement

மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்க தளபதி 65 படக்குழு திட்டம்

By: Nagaraj Mon, 14 Dec 2020 9:48:09 PM

மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்க தளபதி 65 படக்குழு திட்டம்

மார்ச்சில் படப்பிடிப்பு... 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பை மார்ச்சில் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. 'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குத் தேதிகள் அளித்துள்ளார் விஜய்.

'தளபதி 65' படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டமாக 'தளபதி 65' படத்தின் தலைப்பு அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

vijay shooting,march,sun pictures,company,diwali ,விஜய் படப்பிடிப்பு, மார்ச் மாதம், சன் பிக்சர்ஸ், நிறுவனம், தீபாவளி

இந்நிலையில், 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மூன்று கட்டமாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்து, தீபாவளிக்கு வெளியிட்டுவிட வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு, படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags :
|