Advertisement

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 09 Nov 2020 2:20:38 PM

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பொதுமக்கள் இடையே பரவி வருகிறோம். சாதாரண குடிமக்கள் முதல் எம்எல்ஏக்கள் எம்பி வரையிலும் குறிப்பாக திரையுலகினர்களையும் இந்த கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை.

இந்த நிலையில் ஏற்கனவே திரையுலகைச் சேர்ந்த விஷால், தமன்னா, அமிதாப் குடும்பம் உள்பட பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்

இது குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், 'ஆச்சாரியா படத்தின் படப்பிடிப்பில் மிகுந்த பாதுகாப்புடன் இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தெரிந்தது.

telugu,superstar,chiranjeevi,corona virus,experiment ,தெலுங்கு,சூப்பர் ஸ்டார்,சிரஞ்சீவி,கொரோனா வைரஸ்,பரிசோதனை

இதனை அடுத்து சோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. இதனால் நான் வீட்டில் என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டேன். எனவே தயவு செய்து என்னுடன் கடந்த ஐந்து நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்

சிரஞ்சீவிக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்ற தகவல் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|