Advertisement

குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர்பாலை அடித்து துரத்தினாரா வனிதா?

By: Nagaraj Tue, 20 Oct 2020 2:18:17 PM

குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர்பாலை அடித்து துரத்தினாரா வனிதா?

குடிபோதையில் மிகவும் வம்பிழுத்த கணவர் பீட்டர் பாலை வனிதா அடித்து துரத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இருவருக்குமான திருமண உறவு முறிந்து விட்டதாக தகவல்கள் பரபரக்கின்றன.

நடிகை வனிதா, பீட்டர்பால் என்ற அனிமேஷன் இயக்குனரை கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரது மனைவி எலிசபெத் ஹெலன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கூட செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக பார்க்கப்பட்டது. வனிதாவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டு வந்தனர். அது அத்தனைக்கும் பதிலடி கொடுத்து தனது புதுமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்த வனிதா சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவாவிற்கு வெகேஷன் சென்றுள்ளார்.

vanitha,peterball,beaten,chased,drunk,goa ,வனிதா, பீட்டர்பால், அடித்து துரத்தினார், குடிபோதை, கோவா

அங்கிருந்து பீச்சில் எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் தற்போது எல்லோரும் ஷாக்காகி சிரிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கோவாவில் ஓவராக குடித்த கணவர் பீட்டர் பால் வனிதாவுடன் வம்பிழுத்து பிரச்சனை செய்துள்ளார்.

ஆரம்பத்தில் இதை பொறுத்துக்கொண்ட வனிதா பின்னர் ஓவராக டார்ச்சர் செய்ததால் அங்கேயே பீட்டர் பாலை அடித்து துரத்தி விட்டு அவருடனான தன் திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்னும் வனிதா வாய் திறக்காமல் அமைதியாக உள்ளார்.

Tags :
|
|
|