Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிறந்த நாள் அன்று வீட்டிற்கு வர வேண்டாம்; ரஜினிகாந்த் தரப்பில் அறிவிப்பு

பிறந்த நாள் அன்று வீட்டிற்கு வர வேண்டாம்; ரஜினிகாந்த் தரப்பில் அறிவிப்பு

By: Nagaraj Sun, 06 Dec 2020 4:49:29 PM

பிறந்த நாள் அன்று வீட்டிற்கு வர வேண்டாம்; ரஜினிகாந்த் தரப்பில் அறிவிப்பு

பிறந்த நாள் அன்று யாரும் வீட்டிற்கு வரவேண்டாம் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஜினி சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று அங்கிருந்து ஹைதராபாத் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரஜினிகாந்த் தனது பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் , நிர்வாகிகள் போயஸ் கார்டன் வீட்டிற்கு வரவேண்டாம் என ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

rajinikanth,hyderabad,fans,birthday,party ,ரஜினிகாந்த், ஹைதராபாத், ரசிகர்கள், பிறந்த நாள், கட்சி

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஏற்கெனவே 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் 40 சதவீத காட்சிகள் படமாக வேண்டி உள்ளது.

இதனால், ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த்தின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். படப்பிடிப்பை விரைவாக முடித்து கொடுத்த பின்னர் கட்சி பணிகளில் தீவிரம் காட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|