Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்.,-பெயரை செம டிரெண்ட் ஆக்கி வரும் அஜித் ரசிகர்கள்

ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்.,-பெயரை செம டிரெண்ட் ஆக்கி வரும் அஜித் ரசிகர்கள்

By: Nagaraj Thu, 05 Nov 2020 7:59:01 PM

ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்.,-பெயரை செம டிரெண்ட் ஆக்கி வரும் அஜித் ரசிகர்கள்

ஈஸ்வரமூர்த்திIPS-ஐ செம டிரெண்ட் ஆக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்திIPS என தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

ajith,strength,trend,fans,police officer ,அஜித், வலிமை, ட்ரெண்ட், ரசிகர்கள், காவல்துறை அதிகாரி

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் காவல் துறை அதிகாரியாக வரும் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி IPS எனும் தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

நாளிதழில் வெளியான தகவலை கொண்டு அஜித் ரசிகர்கள் #ஈஸ்வரமூர்த்தி IPS எனும் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அப்டேட் வேண்டும் எனவும் ட்வீட் செய்து வருகின்றனர்.

Tags :
|
|
|