Advertisement

நயன்தாராவின் பிறந்தநாளை ஒட்டி நெற்றிக்கண் டீசர் வெளியீடு

By: Nagaraj Wed, 18 Nov 2020 2:29:15 PM

நயன்தாராவின் பிறந்தநாளை ஒட்டி நெற்றிக்கண் டீசர் வெளியீடு

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தன் காதலர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்ச்சர்ஸ் பாணரில் நயன்தாரா நடிக்கும் படம் நெற்றிக்கண். 1981ம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படத்தின் தலைப்பை வைத்துள்ளனர்.

kollywood,nayanthara,teaser,forehead,birthday ,கோலிவுட், நயன்தாரா, டீசர், நெற்றிக்கண், பிறந்தநாள்

'அவள்' பட இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்குகிறார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இன்று நயன்தாராவின் பிறந்தநாளில் 'நெற்றிக்கண்' படத்தின் டீஸர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'ப்ளைண்ட்' (blind ) பட ரீமேக் 'நெற்றிக்கண்' எனவும் கோலிவுட்டில் கிசு கிசுத்து வருகின்றனர்.

Tags :
|