Advertisement

அனிதா சம்பத்தால் எரிச்சல் படும் சக போட்டியாளர்கள்

By: Nagaraj Fri, 30 Oct 2020 2:26:03 PM

அனிதா சம்பத்தால் எரிச்சல் படும் சக போட்டியாளர்கள்

அய்யா பிக்பாஸ் அனிதாவை கொஞ்சமாக அழ சொல்லுங்கள். கொஞ்சமாக பேச சொல்லுங்கள். ஓட்டை பானையில் நண்டு புகுந்தது போல் லொட லொடக்கிறார். நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே அவரால் குறைந்து வருகிறது என்று நெட்டிசன்கள் தலையில் அடித்து கொள்கின்றனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து வருகிறது. ஒரு சண்டை முடிவுக்கு வந்தால், உடனடியாக அடுத்ததாக யாரேனும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஒருபக்கம் அனிதா சம்பத் தொடர்ந்து எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார். அல்லது மேடையும், மைக்கும் கிடைத்தால் அரசியல்வாதிகள் எப்படி வைச்சு செய்வார்களோ அதுபோல் வளவளவென்று பேசி கொல்கிறார்.

அதுவும் தனது சொந்த கதையை கூறுவது என்றால் வளவளவென்று பேசிக்கொண்டே இருக்கிறார். 'நேற்று நீங்கள் யாரை மிஸ் செய்கிறீர்கள்?' என போட்டியாளர்கள் ஒவ்வொருவாக சொல்ல வேண்டும் எனக்கூற, எதிர்பார்த்தது போலவே அனிதா சம்பத் நீட்டி முழக்கி, அழுது வடிந்து பேசிக்கொண்டே இருந்தார்.

anita sampath,resource talk,netizens,kaduppu,big boss ,அனிதா சம்பத், வளவள பேச்சு, நெட்டிசன்கள், கடுப்பு, பிக்பாஸ்

ஒருகட்டத்தில் இது சக போட்டியாளர்களுக்கே எரிச்சலையே ஏற்படுத்தியது. இந்நிலையில், அனிதா சம்பத் பேசிக்கொண்டிருந்த போது மற்ற போட்டியாளர்கள் எப்படி ரியாக்ட் செய்தார்கள் என்பதை எடிட் செய்து நெட்டிசன்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். சம ஹவுஸ்மேட்டும் இடையில் பிக்பாஸ் அவருக்கு என்ன டாஸ்க் என்பதை நினைவுப்படுத்துங்கள் என்று கேட்டதும், முகத்தை சுளித்ததையும் அனைவரும் காண முடிந்தது. இதை பார்த்தும் அனிதா தன் பேச்சை தொடர்ந்து நிறுத்தவில்லை.

இதனால் நெட்டிசன்கள் அனிதாவுக்கு மியூட் போடுங்கள் என்று நொந்து கொள்கின்றனர். என்ன ப்ளட்... ஷேம் ப்ளட் என்ற வடிவேலுவின் காமெடி காட்சிதான் ஞாபகத்திற்கு வருகிறது.

Tags :