Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டிரைலரை வெளியிட்ட படக்குழு!

சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டிரைலரை வெளியிட்ட படக்குழு!

By: Monisha Fri, 13 Nov 2020 4:19:36 PM

சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டிரைலரை வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் 'எதிர் வினையாற்று' படம் உருவாகி உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.

cinema,crime thriller,sanam shetty,alex,trailer ,சினிமா,கிரைம் திரில்லர்,சனம் ஷெட்டி,அலெக்ஸ்,டிரைலர்

படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நாயகி சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு யுவன் கார்த்திக் இசையமைத்துள்ளார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Tags :
|
|