Advertisement

பிக்பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷனில் சிக்கிய ஐவர்!

By: Monisha Mon, 21 Dec 2020 2:59:40 PM

பிக்பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷனில் சிக்கிய ஐவர்!

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் படலம் நடைபெற்றும். அந்தவகையில் இன்று காலை வெளியான முதல் புரோமோவில் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்து வருகின்றனர்.

ஷிவானி மற்றும் ஆஜித் ஆகிய இருவரையும் சோம் நாமினேட் செய்கிறார். இவர்கள் இருவருமே பாலாவை நம்பிய விளையாடி வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரையும் அனிதாவும் நாமினேட் செய்கிறார். இந்த 78 நாட்களில் ஷிவானி என்ன செய்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை என்று அனிதா காரணமாக கூறுகிறார்.

big boss,nomination,shivani,ajith,anita ,பிக்பாஸ்,நாமினேஷன்,ஷிவானி, ஆஜித், அனிதா

பாலாஜி சோம்சேகரை நாமினேட் செய்கிறார். கேபி மற்றும் ஆரி ஆகிய இருவரையும் ரம்யா நாமினேட் செய்கிறார். மற்றவர்களின் பேச்சை புரிந்து கொள்ளாமல் ஆரி இருப்பதாக ரம்யா காரணமாக கூறுகிறார்

கேபி மற்றும் ஷிவானியை ஆரி நாமினேட் செய்கிறார். அனிதா மற்றும் ஆரியை ஆஜித் நாமினேட் செய்கிறார். மேலும் கேப்ரில்லா அனிதாவையும் ரியோ ஆரியையும் நாமினேட் செய்கின்றனர். மொத்தத்தில் இந்த வார நாமினேஷனில் ஷிவானி, ஆஜித், அனிதா, ஆரி, கேபிரில்லா ஆகிய ஐவர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
|