Advertisement

ஹாலிவுட் நடிகர் டேனி மாஸ்டர்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

By: Monisha Fri, 19 June 2020 11:48:20 AM

ஹாலிவுட் நடிகர் டேனி மாஸ்டர்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

நடிகரும், அறிவியலாளருமான டேனி மாஸ்டர்சன் தொலைக்காட்சியின் "தட் 70 ஷோ" மற்றும் "தி ராஞ்ச்" ஆகியவற்றில் நடித்து உள்ளார். அவருக்கு வயது 44. இந்நிலையில் அவர் 2001 மற்றும் 2003 க்கு இடையில் ஹாலிவுட் ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நான்கு பெண்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசில் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளித்தனர் கடந்த ஆண்டு மாஸ்டர்சன் மற்றும் சர்ச் ஆஃப் சைண்டாலஜி மீது வழக்குத் தாக்கல் செய்தனர்.

மாஸ்டர்சன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 45 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கிடைக்கும்

இது குறித்து மாஸ்டர்சன் வக்கீல் டாம் மெசெரூ கூறுகையில், மாஸ்டர்சன் நிரபராதி, எல்லா ஆதாரங்களும் இறுதியாக வெளிச்சத்திற்கு வரும்போது, அவர் சாட்சியம் அளிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அவர் விடுவிக்கப்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

Tags :
|
|