Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம்ஷெட்டியும் இல்லையா?

By: Monisha Sat, 03 Oct 2020 5:00:08 PM

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம்ஷெட்டியும் இல்லையா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் போட்டியாளரா? என நடிகை சனம் ஷெட்டி பேட்டி எடுத்தவரையே திருப்பிக் கேள்வி கேட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம்ஷெட்டியும் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த இறுதி பட்டியல் கிட்டத்தட்ட வெளியாகி விட்ட நிலையில் அந்த பட்டியலில் ஆரம்பத்தில் இருந்தவர் நடிகை சனம்ஷெட்டி. இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் அவரை பேட்டி எடுத்தபோது, 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்கிறீர்கள் என நான் கேள்விப்பட்டேன், அது உண்மையா? என கேட்க அதற்கு சனம் ஷெட்டி நானும் கேள்விப்பட்டேன்' என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

big boss show,sanamshetty,vijaytv,producer raveendran ,பிக் பாஸ் நிகழ்ச்சி,சனம்ஷெட்டி,விஜய்டிவி,தயாரிப்பாளர் ரவீந்திரன்

ஏற்கனவே ஆர்ஜே அர்ச்சனா, கிரண் ரத்தோட் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அந்த பட்டியலில் சனம்ஷெட்டியுமா? என பிக்பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் 14 போட்டிகளில் முதல் கட்டமாகவும் 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாகவும் அதில் சனம்ஷெட்டி வைல்ட்கார்ட் போட்டியாளராக கலந்து கொள்ளவிருப்பதாகவும் விஜய்டிவி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :