Advertisement

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது சோம்சேகரா?

By: Nagaraj Sat, 07 Nov 2020 8:24:08 PM

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது சோம்சேகரா?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து சோம் சேகர் தான் வெளியேறப் போகிறார் என்று நெட்டிசன்ஸ் ரவுண்ட் கட்ட ஆரம்பித்துள்ளனர்.

இவ்வளவு நாளாகியும் என்னப்பா இது படு போராக உள்ளது என்ற முணுமுணுப்பை ரசிக சிகாமணிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது பிக் பாஸ் சீசன் 4. களத்தில் சுவாரசியமான போட்டியாளர்கள் இல்லாததுதான் இதற்கு காரணம் என்று ஆளாளுக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் சஸ்பென்ஸ் தான் பிக்பாஸ் வெற்றிக்கு காரணம் என்றாலும், இதுவரை நடந்த எபிசோடுகளில் அப்படி ஒன்று இருக்கிறதா என்கிற ரேஞ்சுக்கு சென்றுவிட்டனர் ரசிகர்கள். வாராவாரம் யார் என்ற சஸ்பென்ஸ் இந்த வாரமும் முன்கூட்டியே உடைந்துவிட்டதாக சொல்லலாம்

som shaker,eviction,netizens,big boss ,சோம் சேகர், எவிக்சன், நெட்டிசன்ஸ், பிக்பாஸ்

நாமினேஷன் பார்த்த ரசிகர் அது கட்டாயம் சோமசேகர் தான் என்று அடித்துக் கூறுகின்றனர். எவிக்சன் பட்டியலில் பலர் இருந்தாலும் சோமசேகர் படு வீக்காக உள்ளவர் என்பதால் இந்த வாரம் இவர்தான் வெளியேற்றப்படும் நபர் என்று கணித்துள்ளனர்.

சோம் சேகரை தலைவராக விடாமல் செய்த காரியங்கள் அவர்தான் இந்த வாரம் எவிக்சன் என்று சொல்லாமல் சொல்வது போன்று உள்ளதாக நெட்டிசன்ஸ் கூறிவருகின்றனர். ஆக மொத்தம் இந்த சோம்சேகருக்கு கேட் பாஸ் ரெடி என்பது கிட்டத்தட்ட தெரிஞ்சு போச்சு.

Tags :