Advertisement

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவி!

By: Monisha Sun, 27 Dec 2020 4:03:51 PM

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில் ஜெயம் ரவியை பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதலில் கமல்ஹாசனை சந்தித்துவிட்டு அதன்பின்னர் அகம்டிவி மூலம் போட்டியாளர்களை சந்தித்துப் பேசும் ஜெயம் ரவி, "வின்னிங் டைம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இறுதி போட்டி நெருங்கிவிட்டது. அனைவரும் சூப்பராக விளையாடுகிறீர்கள், பயங்கரமாக இருக்கிறது, செம எண்டர்டெயினிங் ஆக இருக்கின்றது

உங்களுடைய உண்மையான திறமையை நீங்கள் எப்போதும் போல் காட்டினாலே போதும், உங்களை அங்கிருந்து தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் நாங்கள் வெளியில் இருந்து வேற மாதிரி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சின்சியராக விளையாடுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது" என்று கூறினார்.

big boss,jayam ravi,entertainment,kamal haasan,final ,பிக்பாஸ்,ஜெயம் ரவி,எண்டர்டெயினிங்,கமல்ஹாசன்,இறுதி போட்டி

அப்போது கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலரா பார்க்கிறீர்களா? என்று கேட்டபோது 'சார் நீங்கள் எது செய்தாலும் நான் பார்ப்பேன், ஏனெனில் நான் உங்களுடனே வெறித்தனமான பக்தன்' என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரோமோ முடிவடைகிறது. கமல்ஹாசனுடன் பேசிக்கொண்டிருக்கும் ஜெயம்ரவி, பிக்பாஸ் வீட்டிற்கும் சென்று போட்டியாளர்களை நேரிலும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :