Advertisement

ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் வெளியேறுகிறார்!

By: Monisha Sat, 28 Nov 2020 4:20:24 PM

ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் வெளியேறுகிறார்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் வழக்கத்தைவிட சுவராசியமாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த வாரம் ஏகப்பட்ட பிரச்சினைகளை பஞ்சாயத்து செய்ய வேண்டிய நிலையிலும் கமலஹாசன் உள்ளார்.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் ஜித்தன் ரமேஷ் தான் குறைவான வாக்குகள் பெற்று இருந்ததாகவும் அதனால் அவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகியது. ஆனால் அதே நேரத்தில் நேற்றுடன் ஆன்லைனில் வாக்குகள் பதிவாகும் நேரம் முடிந்து விட்டாலும் இன்று காலை முதல் மிஸ்டு கால்கள் மூலம் ஜித்தன் ரமேஷ் ரசிகர்கள் வாக்களித்து வந்ததாகவும் எனவே அவர் கடைசி நேரத்தில் காப்பாற்றப் பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

jithan ramesh,big boss,kamal haasan,issue,nomination ,ஜித்தன் ரமேஷ்,பிக்பாஸ்,கமல்ஹாசன்,பிரச்சினை,நாமினேஷன்

ஆனால் சற்று முன் வெளிவந்த தகவலின்படி ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் வெளியேறுகிறார் என்ற தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது. இதனால் மிஸ்டு கால் மூலம் ஜித்தன் ரமேஷை காப்பாற்ற அவரது ரசிகர்கள் செய்த கடைசி முயற்சியும் வீண் என தெரிகிறது.

50 நாட்களுக்கு பிறகு ஜித்தன் ரமேஷ் இப்போதுதான் சுவராசியமாக விளையாடத் தொடங்கினார். ஆனால் அதற்குள் அவர் வெளியேறிவிட்டது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது

Tags :
|