Advertisement

பெங்குவின் திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட முன்னணி நடிகர்கள்!

By: Monisha Thu, 11 June 2020 4:47:48 PM

பெங்குவின் திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட முன்னணி நடிகர்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து முடித்துள்ள ’பெங்குவின்’ என்ற திரைப்படம் வரும் 19ஆம் தேதி அமேசான் ப்ரைம் டைமில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான போது இந்த டீசரை தமிழில் த்ரிஷாவும், மலையாளத்தில் மஞ்சுவாரியரும், தெலுங்கில் சமந்தாவும், ஹிந்தியில் டாப்ஸியும் வெளியிட்டனர். கீர்த்தி சுரேஷூக்காக 4 முன்னணி நடிகைகள் இணைந்தனர்.

இந்த நிலையில் தற்போது இன்று மதியம் 12 மணிக்கு இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த டிரெய்லரை தமிழில் நடிகர் தனுஷும், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும் வெளியிட்டனர்.

penguin movie,keerthi suresh,actor dhanush,actor mohanlal,actor nani ,பெங்குவின் திரைப்படம்,கீர்த்தி சுரேஷ்,நடிகர் தனுஷ்,நடிகர் மோகன்லால்,நடிகர் நானி

மேலும் தெலுங்கில் இந்த படத்தின் டிரைலரை நடிகர் நானி வெளியிட்டார். கீர்த்தி சுரேஷூக்காக தனுஷ், மோகன்லால் மற்றும் நானி இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் அனில் கிரிஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Tags :