Advertisement

குடும்பத்தோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேக்னா ராஜ்!

By: Monisha Wed, 09 Dec 2020 5:09:28 PM

குடும்பத்தோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேக்னா ராஜ்!

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அப்போது அவருடைய மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ் 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் மேக்னாராஜ்க்கு குழந்தை பிறந்தது. குழந்தையை சிரஞ்சீவி சார்ஜா புகைப்படம் அருகே வைத்து பெயரிட்டனர்.

family,magna raj,corona virus,infection,treatment ,குடும்பம்,மேக்னா ராஜ்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை

இந்த நிலையில் தற்போது மேக்னாராஜ், அவருடைய குழந்தை மற்றும் மேக்னாராஜின் தந்தை தாய் ஆகிய நால்வருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனை தனது சமூக வலைத்தளத்தில் மேக்னாராஜ் உறுதி செய்துள்ளார். தற்போது குழந்தை நலமாக இருப்பதாகவும் மற்றவர்கள் சிகிச்சையில் இருப்பதாகவும் மேக்னாராஜ், அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|