Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிறந்த நாள் கொண்டாடும் பிரியமானருக்கு முத்தம் கொடுக்கும் மாளவிகா மோகனன்!

பிறந்த நாள் கொண்டாடும் பிரியமானருக்கு முத்தம் கொடுக்கும் மாளவிகா மோகனன்!

By: Monisha Thu, 05 Nov 2020 4:00:37 PM

பிறந்த நாள் கொண்டாடும் பிரியமானருக்கு முத்தம் கொடுக்கும் மாளவிகா மோகனன்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே பாலிவுட் ஆக்சன் திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள மாளவிகா மோகனன், தனுஷின் அடுத்த படத்திலும் நாயகியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மிகச் சிலரில் ஒருவர் மாளவிகா மோகனன். அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

birthday,beloved,kiss,malvika mohanan,photo ,பிறந்த நாள்,பிரியமானவர்,முத்தம்,மாளவிகா மோகனன்,புகைப்படம்

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பிரியமான ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் காட்டு தீ போல் பரவி வைரலானதை அடுத்து அந்த புகைப்படத்தில் இருக்கும் பிரியமானவர், மாளவிகா மோகனனின் அன்பு சகோதரர் என்பதும் அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தான் மாளவிகா மோகனன் முத்தம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

Tags :
|