Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள்; ஹாட்ஸ்டார் அறிவிப்பு

முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள்; ஹாட்ஸ்டார் அறிவிப்பு

By: Monisha Sat, 24 Oct 2020 10:08:22 AM

முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள்; ஹாட்ஸ்டார் அறிவிப்பு

தமிழகத்தில் இன்னும் திரையரங்கங்கள் திறக்காத நிலையில் ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய திரைப்படங்களையும் புதிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றன. அந்த வகையில் வரும் நவம்பரில் அதிரடியாக தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் வெளிவர இருப்பதாக ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.

இதன்படி காஜல் அகர்வால், ஆனந்தி, வைபவ் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய வெப்சீரிஸ் 'லைவ் டெலிகேஸ்ட்' நவம்பரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சத்யராஜ் சீதா மற்றும் ரக்‌ஷன் நடித்த 'மை ஃபெர்பெக்ட் ஹஸ்பெண்ட்' என்ற வெப்சீரிஸ் நவம்பரில் வெளியாக உள்ளது.

movies,web series,hotstar,nayanthara,kajal agarwal ,திரைப்படங்கள்,வெப்சீரிஸ்,ஹாட்ஸ்டார்,நயன்தாரா,காஜல் அகர்வால்

மேலும் ஜெய், வாணிபோஜன் நடிப்பில் உருவான 'ட்ரிபிள்ஸ்', தமன்னா நடித்த 'நவம்பர் ஸ்டோரி' ஆகியவையும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி தீபாவளி ஜாக்பாட் ஆக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கிய 'மூக்குத்தி அம்மன்' திரைப்படமும் நவம்பர் கொண்டாட்டம் தான் என ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.

முழுக்க முழுக்க முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள் ஹாட்ஸ்டாரில் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மற்ற ஓடிடி தளங்களும் இதேபோன்ற அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|