Advertisement

நடிகை ஆண்ட்ரியாவின் சர்ச்சை கருத்தால் நயன்தாரா ரசிகர்கள் கோபம்

By: Monisha Mon, 28 Dec 2020 09:52:00 AM

நடிகை ஆண்ட்ரியாவின் சர்ச்சை கருத்தால் நயன்தாரா ரசிகர்கள் கோபம்

நடிகை நயன்தாராவின் அபாரமான வளர்ச்சிக்கு இது ஒன்று தான் காரணம் என்று நடிகை ஆண்ட்ரியா கூறிய கருத்து நயன்தாரா ரசிகர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஆண்ட்ரியா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நயன்தாரா குறித்து கூறிய போது, 'ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்ததே அவரது வளர்ச்சிக்கு காரணம். ஆனால் நான் என்னுடைய படங்களில் சிறந்த கதைகள் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பேன். கதைக்கு தேவை என்றால் மட்டுமே நான் நெருக்கமாக நடித்து வருகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

andrea,nayantara,fans,anger,growth ,ஆண்ட்ரியா, நயன்தாரா,ரசிகர்கள்,கோபம்,வளர்ச்சி

ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்ததால் தான் நயன்தாராவின் வளர்ச்சி அபாரமாக உள்ளது என்று ஆண்ட்ரியா தெரிவித்த கருத்து நயன்தாரா ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. ரஜினி, விஜய், அஜீத்துடன் நடித்த பல நடிகைகள் தற்போது திரை உலகை விட்டு காணாமல் போயுள்ள நிலையில் நயன்தாராவின் வெற்றிக்கு இது ஒன்றை மட்டுமே காரணமாக ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளது தவறு என்று நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் ஆண்ட்ரியாவும் கமல், அஜித், விஜய், விஷால், சரத்குமார், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags :
|
|
|