Advertisement

பிக்பாஸ் இல்லமா... விளம்பர நிலையமா? ரசிகர்கள் குற்றச்சாட்டு

By: Nagaraj Sat, 07 Nov 2020 1:25:16 PM

பிக்பாஸ் இல்லமா... விளம்பர நிலையமா? ரசிகர்கள் குற்றச்சாட்டு

விளம்பர வீடாக மாறும் பிக்பாஸ் இல்லம்... பிக்பாஸ் வீடு தற்போது தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க, விளம்பர வீடாக மொத்தமாகவே மாறி விட்டது. பிரிஸ்மா, டிரெண்ட்ஸ், ஆர்.கே.ஜி நெய் விளம்பரங்களை தொடர்ந்து, நேற்று ப்ரீத்தி மிக்ஸி விளம்பர டாஸ்க்கும் பிக்பாஸ் வீட்டில் நடந்தேறியது.

எப்போதுமே அர்ச்சனா எப்படித் தான் அவ்வளவு எனர்ஜியுடன் இருக்காங்கன்னு தெரியவே இல்லை. இதில் இப்போது இந்த டாஸ்க்கிலும் அவங்க அணி தான் ஜெயித்தது. அதிலும் சமீபத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் விளம்பரதாரர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால், சிந்தால் சோப் இருக்கிறது.

only advertising,charge,fans,task,big boss ,ஒரே விளம்பரம், குற்றச்சாட்டு, ரசிகர்கள், டாஸ்க், பிக்பாஸ்

இதனால் பிக்பாஸ் போட்டியாளர்களை எல்லாம் நடு வீட்டில், பாத் டப் வைத்து அடுத்து குளித்து விட்டு யார் உடம்பில் நல்லா அழுக்கு போயிருக்கு என டாஸ்க் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இந்நிலையில் விளம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும், அதனை ஒரு சுவாரஸ்ய டஃப் போட்டியாகவும், ஃபன் டாஸ்க்காகவும் கொடுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கொடுக்க தவறி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகளும் ரசிகர்களால் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

Tags :
|
|
|