Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உங்கள் விளையாட்டை விளையாடுங்கள்; நிஷாவுக்கு கமலின் நாசுக்கான அட்வைஸ்

உங்கள் விளையாட்டை விளையாடுங்கள்; நிஷாவுக்கு கமலின் நாசுக்கான அட்வைஸ்

By: Nagaraj Sun, 29 Nov 2020 3:03:46 PM

உங்கள் விளையாட்டை விளையாடுங்கள்; நிஷாவுக்கு கமலின் நாசுக்கான அட்வைஸ்

நிஷாவுக்கு நாசுக்காக அட்வைஸ் வழங்கிய கமல்.. நாமினேஷன் டாப்புள் கார்டை விட்டுக்கொடுத்த நிஷாவுக்கு உங்கள் விளையாட்டை விளையாடுங்கள் என நாசுக்காக அறிவுரை வழங்கினார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் டாப்புள் கார்டு டாஸ்க்கை கொடுத்த பற்ற வைத்தார் பிக்பாஸ். அப்போது ஏற்பட்ட பிரச்சனை கால் செண்டர் டாஸ்க்கிலும் தொடர்ந்தது. இந்நிலையில் நாமினேஷன் டாப்புள் கார்டை, வென்ற நிஷா, அனிதா சொன்ன ஒரு வார்த்தையால் எமோஷனலாகி அவரிடம் டாப்புள் கார்டை கொடுத்தார்.

அதன்பிறகு ரியோவிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை, ஆடியன்ஸை சந்திக்க பயப்படுகிறார் கூறுகிறார்கள். ரியோவுக்காக விளையாடுகிறார் என குத்துறாங்க என்று கதறினார். இந்நிலையில் இதுதொடர்பாக, நேற்றைய எபிசோடில் நிஷாவிடம் விசாரித்தார் கமல்.

nisha,big boss,advice,kamal,people,will win ,நிஷா, பிக்பாஸ், அட்வைஸ், கமல், மக்கள், ஜெயிக்கவைக்கணும்

அப்போது பேசிய நிஷா, ஆமம் சார் ஆடியன்ஸ சந்திக்கலன்னு சொல்றாங்க. அன்பு காட்றது பொய்ன்னு சொல்றாங்க.
இப்போல்லாம் கண்ணாடிய பார்த்தா எனக்கே பயமா இருக்கு சார் என்றார். இதனைக் கேட்ட கமல் மனசுக்குள்ள பயம் இருக்கலாம். ஆனால் அது வெளியே தெரிய கூடாது என்றார்.

தொடர்ந்து பேசிய கமல் எப்போதுமே ரியோ வின்னர் ஆக வேண்டும் என்று விரும்பியிருக்கிறீர்கள். இது தொடர்பாக எழுதி வச்சுருக்கீங்க. இங்க உங்களுக்காகதான் விளையாட வந்திருக்கீங்க. இது ஒரு அற்புதமான வாய்ப்பு. நீங்கள் யாரையோ வெற்றி பெற வைக்க எதற்கு இங்கு வரணும் என்றுதான் கேட்பார்கள். யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்களுக்காக விளையாடுங்க.. மத்தவங்களுக்கு விளையாட கூடாது. இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது.

நீங்கள் புயலின் போது இறங்கி வேலை செய்தீர்கள். யார ஜெயிக்க வைக்கணும் என்பதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று குட்டு வைக்காத குறையாக அட்வைஸ் செய்தார் கமல். அதனைக் கேட்ட நிஷா ஓகே சார் என்று கமலின் அட்வைஸை ஏற்றார்.

Tags :
|
|
|
|