Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்தின் வெளியீடு

ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்தின் வெளியீடு

By: Nagaraj Thu, 08 Oct 2020 3:55:53 PM

ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்தின் வெளியீடு

ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்தின் வெளியீடு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

1993-ல் வெளிவந்த ஜூராசிக் பார்க் படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கினார். இதையடுத்து இதுவரை ஜூராசிக் பட வரிசையில் ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக 2018-ல் ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் படம் வெளியானது.

jurassic world,next year,adjournment,announcement,colin ,ஜூராசிக் வேர்ல்ட், அடுத்தாண்டு, ஒத்தி வைப்பு, அறிவிப்பு, காலின்

ஜூராசிக் வேர்ல்ட்: டொமினியன் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் திட்டமிட்டபடி அடுத்த வருடத்துக்குப் பதிலாக 2022-ம் வருடம் ஜூன் 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அடுத்த வருடம் ஜூன் 11 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. காலின் டிரேவோர்ரோ இயக்கியுள்ளார். ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் படத்தின் அடுத்த பாகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :