Advertisement

சூரரை போற்று படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

By: Monisha Wed, 21 Oct 2020 6:27:43 PM

சூரரை போற்று படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

சூர்யா நடித்த 'சூரரை போற்று' திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டு முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு 5 நாட்களுக்கு முன்பே படத்தின் கிளியரன்ஸ் அனைத்தும் வரவேண்டும் என்றும், ஆனால் தற்போது வரை கிளியரன்ஸ் வராததால் இந்த படத்தின் ரிலீசை ஒத்திவைக்க அமேசான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

surya,soorarai potru,release,amazon,theaters ,சூர்யா,சூரரை போற்று,ரிலீஸ்,அமேசான்,திரையரங்குகள்

சூரரைப்போற்று படத்தின் அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதிக்கு ஒன்பது நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன்கள் எதுவும் இல்லாமல் இருந்ததில் இருந்தே இந்த படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது தற்போது அந்த சந்தேகம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒருவேளை நேரடியாக திரையரங்குகளில் 'சூரரை போற்று' திரையிடப்படுமா? அல்லது வேறு தேதியில் ஓடிடியில் வெளியாகுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags :
|
|