Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிரபல நடிகர்கள் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ள தயாரிப்பாளர்கள் வலியுறுத்தல்

பிரபல நடிகர்கள் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ள தயாரிப்பாளர்கள் வலியுறுத்தல்

By: Nagaraj Tue, 04 Aug 2020 10:03:01 AM

பிரபல நடிகர்கள் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ள தயாரிப்பாளர்கள் வலியுறுத்தல்

கொரோனாவுக்கு மருந்து கண்டிபிடிக்கப்படும் வரை படப்பிடிப்பு பற்றி யோசிக்க வேண்டாம். மருந்து கண்டிபிடித்த பிறகு அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம்” என்று பிரபல நடிகர்கள் தெரிவித்தால் தயாரிப்பாளர்கள் வேதனையில் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வெள்ளித் திரையின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, பிரபல நடிகர்கள் அனைவரும் 4 மாதங்களாக வீட்டில் இருந்து வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. ஆனால், கொரோனா காரணமாக இரண்டாம் கட்ட ஷுட்டிங் இன்னும் துவங்கப்படவில்லை. இதனால் ரஜினிகாந்த் வீட்டிலிருந்தபடி திரைப்படங்கள் பார்த்தும், பேரப் பிள்ளைகளுடனும் நேரத்தை செலவழித்தும் வருகிறார்.

கமல்ஹாசன் - இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் - 2 படப்பிடிப்பும் இடையில் நிறுத்தப்பட்டது. இதனால் கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

corona,filming,producers,famous actors,pain ,கொரோனா, படப்பிடிப்பு, தயாரிப்பாளர்கள், பிரபல நடிகர்கள், வேதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து படம் ரிலீசுக்காக காத்திருந்த நேரத்தில், கொரோனா வந்துவிட்டது. இதனால் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடனேயே மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அடுத்த படம், இயக்குனர் குறித்து முடிவெடுக்கப்பட்டு விட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு 30 சதவிகிதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், கொரோனா காரணமாகவே தடைபட்டது. இதுபோலவே விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ் என முன்னணி நடிகர்கள் அனைவரின் திரைப்படமும் நிறுத்தப்பட்டுள்ளது.

திரைத் துறையினரின் நலன் கருதி படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதத்திலாவது அனுமதி கிடைக்கலாம் என்று திரைத் துரையில் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

படப்பிடிப்பு நிறுத்தப்பட்டாலும் பிரபல நடிகர்கள் அனைவரும், தயாரிப்பாளர்களுடன் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர்கள் தயாரிப்பாளர்களிடம் பேசும்போது, “கொரோனாவுக்கு மருந்து கண்டிபிடிக்கப்படும் வரை நாம் படப்பிடிப்பு பற்றி யோசிக்க வேண்டாம். மருந்து கண்டிபிடித்த பிறகு அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம்” என்று வெவ்வேறு விதங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

நடிகர்கள் இப்படி சொல்லியிருப்பது தயாரிப்பாளர்களை அதிரவைத்துள்ளது. படம் தொடங்கி இன்னும் முற்றுபெறாமல் நிற்கிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க எப்படியும் 2021 ஆகிவிடும். அதுவரையிலும் படப்பிடிப்பை நடத்தாமல் நிறுத்தி வைப்பதா? படத்திற்காக வாங்கிய கடனுக்கான வட்டியும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் இவர்கள் இப்படி பேசுகிறார்களே என்று தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் பேசி வருகிறார்கள். கடன் உள்ளிட்ட பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி நடிகர்களை சம்மதிக்க வைக்கவும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

Tags :
|