Advertisement

பிக்பாஸ் வீட்டில் ரியோ -சனம் மோதல்; ப்ரோமோ வீடியோ செம வைரலாகுது

By: Nagaraj Thu, 26 Nov 2020 9:02:20 PM

பிக்பாஸ் வீட்டில் ரியோ -சனம் மோதல்; ப்ரோமோ வீடியோ செம வைரலாகுது

நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிரு என்று சனத்திடம் ரியோ கூறும் வீடியோ செம வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வைல்ட் கார்ட் மூலம் அர்ச்சனா, சுசித்ரா என்ட்ரி கொடுத்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். தினமும் பிக்பாஸ் ப்ரோமோ வீடியோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது.

big boss,rio,sanam,conflict,i answered ,பிக்பாஸ், ரியோ, சனம், மோதல், பதில் சொல்லிட்டேன்

அந்த வகையில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் முதலில் அனிதா சம்பத்திற்கும், ரியோ ராஜுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. பின், சனம் ஷெட்டிக்கும், ரியோ ராஜுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அப்போது சனத்திடம் நான் நிறைய நான் நிறையா பதில் சொல்லிட்டேன் ஓடிரு என்கிறார் ரியோ. அதனால் இன்றைய பிக்பாஸ் வீட்டில் செம மோதல் இருக்கும் போல என்கின்றனர் ரசிகர்கள்.

Tags :
|
|