Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விருப்பமில்லாமல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சனம் ஷெட்டி

விருப்பமில்லாமல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சனம் ஷெட்டி

By: Nagaraj Fri, 04 Dec 2020 4:43:26 PM

விருப்பமில்லாமல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சனம் ஷெட்டி

பாலாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விருப்பமில்லாமல் சனம்ஷெட்டி பங்கேற்றது அப்பட்டமாக தெரிந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி தனது பிறந்த நாளை கொண்டாடினார். எனக்கு 25 வயது ஆகிவிட்டது என்று கூறியதை அடுத்து அவர் கேக் வெட்ட, சுற்றியிருந்தவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடினார்கள்

பிறந்தநாள் வாழ்த்து கொண்டாட்டத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் சனம்ஷெட்டிக்கு பாலாஜிக்கும் வாக்குவாதம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சனம் ஷெட்டி எந்தவித ஈடுபாடும் இல்லாமல் பாலாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பெயரளவில் கலந்து கொண்டார்

அவர் பிறந்த நாள் பாடலையும் பாடவில்லை பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து என்ற ஒரு வார்த்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிறந்தநாள் கேக்கை வெட்டிய பாலாஜி நான் எப்போதுமே சில நேரத்தில் கோபப்படுவேன். ஆனால் உடனே மறந்து விடுவேன்.

birthday,balaji,sanamshetty,anger,anita ,பிறந்தநாள், பாலாஜி, சனம்ஷெட்டி, கோபம், அனிதா

அதற்காக நான் மறுபடியும் கோபப்பட மாட்டேன் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் இந்த கேம் அப்படி' என்று கூறினார். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அனிதா கோபத்தில் இருந்தாலும் அந்த கோபத்தை மறந்து பிறந்தநாள் பார்ட்டியில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

கடைசியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இறுதியாக ஆஜித் பாடல் ஒன்றை பாடினார் என்பதும், அந்த பாடலின் இடையிடையே பாலாஜியும் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் நேற்றைய பிறந்தநாள் கொண்டாட்ட காட்சிகள் மட்டும் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.

Tags :
|
|