Advertisement

சீரியல் நடிகை கௌசல்யா செந்தாமரைக்கு உடல் நல பாதிப்பு

By: Nagaraj Sat, 28 Nov 2020 9:08:11 PM

சீரியல் நடிகை கௌசல்யா செந்தாமரைக்கு உடல் நல பாதிப்பு

சீரியல் நடிகை உடல்நிலை பாதிப்பு... பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வரும் நடிகை கெளசல்யா செந்தாமரைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜீ தமிழ் சேனலில் வெளியாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நாயகனின் பாட்டியாக நடித்து வருகிறார் கெளசல்யா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார். 74 வயதாகும் இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :