Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • படப்பிடிப்பில் வேகம் காட்டும் சிலம்பரசன்; கோலிவுட்வாசிகள் வியப்பு

படப்பிடிப்பில் வேகம் காட்டும் சிலம்பரசன்; கோலிவுட்வாசிகள் வியப்பு

By: Nagaraj Wed, 11 Nov 2020 1:23:06 PM

படப்பிடிப்பில் வேகம் காட்டும் சிலம்பரசன்; கோலிவுட்வாசிகள் வியப்பு

ஈஸ்வரன் படத்திற்கு கிடுகிடுவென்று தன் பணிகளை முடித்து அடுத்த படமான மாநாட்டில் பிஸி ஆகி விட்டார் நடிகர் சிலம்பரசன். இவரது இந்த சுறுசுறுப்பை கண்டு கோலிவுட்டே ஆச்சரியத்தில் வாய் பிளந்து நிற்கிறது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்று ரஜினி வசனம் போல் ஒன்றரை வருடம் நடிக்காமல் கேப் விட்டு ரீஎன்ட்ரி தரும் நடிகர் சிம்புவின் வருகை திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. வெயிட் போட்டுவிட்டார், படப் பிடிப்புக்குத் தாமதமாக வருகிறார்.

simbu,tasks,chem speed,surprise,kollywood ,சிம்பு, பணிகள், செம ஸ்பீடு, ஆச்சரியம், கோலிவுட்

படப்பிடிப்பை முடிக்க நீண்ட நாள் ஆகிறது என்று சிம்பு மீது திரையுலகில் பல புகார்கள் இருந்தது. இது அனைத்தையும் ஈஸ்வரன் என்ற ஒரு படத்தின் மூலம் அடித்து உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டார்.

உடலை மெலிய வைத்து ஷாக் கொடுத்தார். 40 நாளில் முழு படப்பிடிப்பையும் முடித்து டப்பிங்கும் பேசி முடித்து அடுத்த படமான மாநாடு ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். இவரது இந்த செம ஸ்பீடு ஒர்க் கோலிவுட்வாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags :
|
|