Advertisement

விஜய்யின் மாஸ்டர் படத்தால் ரிலிஸ் தள்ளிப்போகும் சிம்பு படம்

By: Nagaraj Fri, 18 Dec 2020 7:48:14 PM

விஜய்யின் மாஸ்டர் படத்தால் ரிலிஸ் தள்ளிப்போகும் சிம்பு படம்

விஜய் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் குறைவான தியேட்டர்களே கிடைக்கும் என்பதால் சிம்புவின் ஈஸ்வரன் படம் சற்றே தள்ளி போகிறதாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் தல அஜித் திரைப்படங்கள் வருடந்தோறும் பொங்கல் மற்றும் தீபாவளியில் போட்டி போட்டுக்கொண்டு திரையிடப்படும்.

இந்த வருடம் நடிகர் தல அஜித்திற்கு திரைப்படம் இல்லாததால், தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படமும் பொங்கலன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

simbu movie,january,pongal,vijay movie,opportunities ,சிம்பு படம், ஜனவரி, பொங்கல், விஜய் படம், வாய்ப்புகள்

ஆனால், நடிகர் விஜய்யின் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக 1000 திரையரங்குகளில் வெளியிடப்போவதாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது

இதனால், நடிகர் சிம்புவுக்கு 100 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கும் என்பதால் பொங்கலன்று இந்த திரைப்படம் வெளியாக வாய்ப்பு குறைந்துள்ளது.

அதனால், நடிகர் சிம்புவின் பிறந்தநாள் ஜனவரியில் வருவதால் அவருடைய பிறந்த நாளில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|