Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விஜய்யின் மாஸ்டருடன் பொங்கல் ரிலீசில் மோதுகிறது சிம்புவின் ஈஸ்வரன்

விஜய்யின் மாஸ்டருடன் பொங்கல் ரிலீசில் மோதுகிறது சிம்புவின் ஈஸ்வரன்

By: Nagaraj Thu, 31 Dec 2020 1:52:37 PM

விஜய்யின் மாஸ்டருடன் பொங்கல் ரிலீசில் மோதுகிறது சிம்புவின் ஈஸ்வரன்

சிம்புவின் ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலம்பரசன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ஈஸ்வரன். பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படம் சென்சாருக்கு சென்று இருந்தது. இந்நிலையில், ஈஸ்வரன் படத்துக்கு ‘U’ சர்ட்டிபிகேட் அளிக்கப்பட்டுள்ளது.

‘U’ சர்ட்டிபிகேட் என்றால் ஈஸ்வரன் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்க முடியும். பொங்கலுக்கு வெளியாகும் மற்றொரு படமான மாஸ்டருக்கு ‘U/A’ சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே பெற்றோர்கள் இல்லாமல் சிறார்கள் மாஸ்டர் படத்தை பார்க்க கூடாது.

eeswaran movie,january 14th,song release,welcome ,ஈஸ்வரன் படம், ஜனவரி 14ம் தேதி, பாடல் ரிலீஸ், வரவேற்பு

ஈஸ்வரன் படத்தில் சிம்புக்கு ஜோடியாக, நிதி அகர்வால் மற்றும் நந்திதா இருவரும் நடித்துள்ளனர். பாரதிராஜா, பால சரவணம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே தனம் இடையில் ஈஸ்வரன் படத்தின் தமிழன் பாட்டு என்ற பாடல் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற பாடல்கள் ஜனவரி 2-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :