Advertisement

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீஸ் தாமதம்

By: Monisha Tue, 17 Nov 2020 12:03:39 PM

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீஸ் தாமதம்

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் சில படங்களை திரைக்கு கொண்டு வர இயலவில்லை. அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இணைந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் 7 மாதங்களாக முடங்கி தற்போது மீண்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி உள்ளன. தியேட்டர்களையும் திறந்துள்ளனர். தீபாவளிக்கு 6 புதிய படங்கள் வந்துள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் சில படங்களை திரைக்கு கொண்டு வர இயலவில்லை. அந்த பட்டியலில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் உள்ளது.

sivakarthikeyan,doctor,release,summer vacation,theater ,சிவகார்த்திகேயன்,டாக்டர்,ரிலீஸ்,கோடை விடுமுறை,தியேட்டர்

ஹீரோ படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் உருவாகும் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முயற்சி நடப்பதாக கூறப்பட்டது. பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையில் தியேட்டர்களில் திரையிட ஏற்பாடுகள் நடந்தன.

இந்நிலையில், கொரோனாவால் பட வேலைகளில் ஏற்பட்ட தாமதத்தினால் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். அடுத்து சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் நடிக்க உள்ளார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துள்ளது. இந்த படத்தை ரவிகுமார் இயக்குகிறார்.

Tags :
|