Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சுசித்ரா; எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும்!!!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சுசித்ரா; எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும்!!!

By: Nagaraj Mon, 23 Nov 2020 10:04:53 AM

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சுசித்ரா; எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும்!!!

சுசிக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் (நேற்று) பாடகி சுசித்ரா வெளியேற்றப்பட்ட நிலையில், #Suchi என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டானது.

பாடகி சுசித்ராவை இவ்வளவு சீக்கிரமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து திட்டமிட்டே வெளியேற்றியதாக ஏகப்பட்ட புகார்களும், சுசித்ரா ஹவுஸ்மேட்கள் பற்றி சொன்ன ஒவ்வொரு விஷயமும் உண்மைதான் என அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நேற்று வரை, சுசித்ராவை திட்டி வந்தவர்கள் கூட, இன்று அவருக்கு ஆதரவாக பேசி வருவது வரவேற்கத்தக்கது. இருப்பினும் அவரது நடவடிக்கைக்ள மற்ற ஹவுஸ்மேட் பற்றி அவர் கூறுவதைதானே இவரும் செய்தார். பாலாஜிக்குதானே சப்போர்ட் செய்தார். சம்பந்தமே இல்லாமல் கத்தினார். அப்போது இவரும் கூட்டணிதானே அமைத்தார் என்றும் நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

big boss,chuchi,kicked out,netizens,fans
suchitra,who was evicted from the big boss house; emerging support and opposition !!! ,பிக்பாஸ், சுச்சி, வெளியேற்றப்பட்டார், நெட்டிசன்கள், ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் சுசித்ராவின் செயல்பாடுகள் கடும் வெறுப்பை ஏற்றியதும் உண்மைதானே என்கின்றனர். இது ஒருபுறம் இருக்க சுசித்ரா வெளியேற வேண்டும் என்பதில் குறியாக இருந்த அர்ச்சனா மற்றும் நிஷா, அவர் வெளியேறும் போது கூட அவருக்கு ஒரு பைபை கூட சொல்லாமல், எப்படி பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அர்ச்சனா மற்றும் நிஷா சுச்சி செல்வதை சந்தோஷமாக பார்த்து ரசித்தனர் என்றும் ஒரு சாரார் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
சுச்சி பிக்பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் பண்ண அலம்பலை எல்லாம் கலாய்த்துத் தள்ளி விட்டு, அவருக்கு அதிக ஓட்டுக்களை போடாமல் அவுட்டாக்கி வெளியே அனுப்பி விட்டு, நீதிபதியாக சுச்சி நடந்து கொண்டதை விமர்சித்து விட்டு, இப்போ உடனே சுச்சி சொல்லிட்டாங்க என அர்ச்சனா மற்றும் நிஷா மீது பாய்வது சரியான விமர்சனமா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
உண்மை இதுதான் என்பதையும் அனைவரும் அறிவார்கள். சுச்சியை போல் அடுத்ததாக அனிதாவையும் வெளியில் அனுப்புங்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|