Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விபிஎப் பிரச்சனைக்கு தற்காலிக முடிவு... முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா?

விபிஎப் பிரச்சனைக்கு தற்காலிக முடிவு... முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா?

By: Monisha Tue, 10 Nov 2020 12:23:11 PM

விபிஎப் பிரச்சனைக்கு தற்காலிக முடிவு... முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா?

விபிஎப் கட்டணத்தை தானே ஏற்றுக் கொள்வதாக க்யூப் அறிவித்துள்ள நிலையில் முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. நேற்றே ஒரு சில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் திரையரங்குகள் திறந்தாலும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்பதால் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் விபிஎப் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராததால், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாத நிலை இருந்து வருகிறது.

theaters,vpf problem,movie,release,audience ,திரையரங்குகள்,விபிஎப் பிரச்சனை,திரைப்படம்,ரிலீஸ்,பார்வையாளர்கள்

இந்த நிலையில் திடீர் திருப்பமாக 100% விபிஎப் கட்டணத்தை தானே ஏற்றுக் கொள்வதாக க்யூப் அறிவித்துள்ளது. நவம்பர் மாதத்திற்கு மட்டும் இந்த கட்டணத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் தீபாவளி அன்று திரைக்கு புதிய திரைப்படங்கள் வெளிவந்து திரைஉலகம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனவே இந்த மாதம் மட்டும் விபிஎப் கட்டணத்தை முழு அளவில் ஏற்றுக் கொள்வதாக க்யூப் அறிவித்துள்ளதால் இந்த பிரச்சினைக்கு தற்காலிகமாக முடிவு கிடைத்துள்ளது. எனவே வரும் தீபாவளியன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் விஜய்யின் 'மாஸ்டர்' உள்பட ஒருசில முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவருமா? என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags :
|