Advertisement

தளபதி விஜய்க்கு மறக்க முடியாத பரிசு அளித்த நடிகை!

By: Monisha Fri, 07 Aug 2020 1:44:25 PM

தளபதி விஜய்க்கு மறக்க முடியாத பரிசு அளித்த நடிகை!

பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தளபதி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக மறக்க முடியாத பரிசு ஒன்று கொடுத்து நடிகை ஆதிரை சௌந்தரராஜன் அசத்தியுள்ளார். இது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பிகில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளுக்கு மறுநாள் அவர் படப்பிடிப்புக்கு வந்ததாகவும் அப்போது தான் அவரிடம் சென்று 'நான் உங்களுக்காக பிறந்தநாள் பரிசு ஒன்றை கொடுக்க விரும்புகிறேன்' என்று கூறியதாகவும் அதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

விஜய்க்காக நான் தயார் செய்து வைத்திருந்த பரிசு ஒரு வித்தியாசமானது என்றும் அந்த பரிசு ஒரு கேம் இயந்திரம் என்றும் அதில் 'பிகில்' படத்தில் இடம்பெறுவது போன்று மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு அணியின் வீராங்கனை போன்ற பொம்மைகள் இருந்ததாகவும் அந்த பொம்மைகளில் பிகில் படத்தில் இடம்பெற்றிருந்த வீராங்கனையின் பெயர்கள் மற்றும் நம்பர்களை நானே பதிவு செய்தேன் என்றும் கூறினார்.

actor vijay,bigil,birthday,gift,actress adirai soundarajan ,நடிகர் விஜய்,பிகில்,பிறந்தநாள்,பரிசு,நடிகை ஆதிரை சௌந்தரராஜன்

மேலும் இந்த கேமில் விஜய் அவர்களின் கேரக்டரையும் பொம்மை போல் செய்து இணைத்திருந்தேன் என்றும், இந்த பரிசை விஜய் அவர்கள் பார்த்தவுடன் ‘உண்மையாகவே பிகில் படத்தில் இடம்பெற்ற அணியை பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது என்றும் இந்த பரிசை நான் எப்போது பார்த்தாலும் பிகில் படத்தின் ஞாபகம் வரும் என்று அவர் கூறியதாகவும் ஆதிரை கூறினார்.

மேலும் இந்த கேம் இயந்திரத்தை பெட்ரூமில் வைத்துக்கொள்வேன் அவ்வப்போதும் விளையாடுவேன் என்று விஜய் கூறியதாகவும் ஆதிரை கூறியுள்ளார். எனது பரிசை வாங்கி பார்த்த விஜய் இது எனக்கு மறக்க முடியாத பார்க்க முடியாத பரிசு என்று கூறியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஆதிரை கூறினார்.

Tags :
|
|