Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்டு என்ட்ரி கிடையாது; பரவும் பரபரப்பு தகவல்

பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்டு என்ட்ரி கிடையாது; பரவும் பரபரப்பு தகவல்

By: Nagaraj Mon, 07 Dec 2020 7:56:40 PM

பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்டு என்ட்ரி கிடையாது; பரவும் பரபரப்பு தகவல்

இனிமேல் வைல்ட் கார்டு என்ட்ரி கிடையாதா?... பிக்பாஸ் 4வது சீசனில் 60 நாட்கள் முடிந்துவிட்டது. சுவாரசியம் இல்லாமல் மொக்கையாக போகிறது என பார்வையாளர்கள் கடுப்பில் உள்ளனர்.

ஆரம்பத்திலேயே அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இருவர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்து விட்ட நிலையில் அஜிம் மற்றும் விஜே மகேஸ்வரி ஆகிய இருவரும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

விஜே மகேஸ்வரி தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இன்னும் சில நாட்களே உள்ள பிக் பாஸ் வீட்டில் இனிமேல் வைல்ட்கார்ட் எண்ட்ரி வர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. பிக்பாஸ் முதல் சீசனில் ஏழாவது வாரத்தில் சுஜா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்தார்.

wild card,no more,big boss,9th week ,வைல்ட் கார்டு, இனி கிடையாது, பிக்பாஸ், 9வது வாரம்

அதேபோல் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் விஜயலட்சுமி 9-வது வாரத்தில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாகவும், மூன்றாவது சீஸனில் கஸ்தூரி ஆறாவது வாரத்தில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாகவும் வந்தனர்.

அதிகபட்சமாக 9வது வாரத்திற்கு பிறகு வைல்ட்கார்ட் எண்ட்ரி என்று யாரும் பிக்பாஸ் வீட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 9 வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் நேற்று வரை வைல்ட்கார்ட் என்ட்ரி சந்தேகமே என்று கூறப்படுகிறது.

Tags :