Advertisement

சூர்யாவுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ள நீதிமன்றம்

By: Karunakaran Fri, 18 Sept 2020 5:04:51 PM

சூர்யாவுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ள நீதிமன்றம்

தமிழகத்தில் ஒரே நாளில் நீட் தேர்வு குறித்த பயத்தினால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதனால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் அறிக்கையில், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்று தெரிவித்திருந்தார். இதனை கண்ட நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

court,advice,surya,actor ,நீதிமன்றம், ஆலோசனை, சூர்யா, நடிகர்

தற்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பின் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என தலைமை நீதிபதி அமர்வு முடிவு செய்துள்ளது. மேலும் சூர்யாவுக்கு சில அறிவுரைகளையும் நீதிமன்றம் வழங்கி உள்ளது.

அதில், பொது விவகாரங்கள் குறித்து பேசும்போது கவனம் தேவை. நீதி மன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிக்க கூடாது. விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது. நடிகர் சூர்யா முழுமையாக அறிந்து கொள்ளாமல் விமர்சித்தது தேவையற்றது. கொரோனா காலத்திலும் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட்டு 42,233 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என அறிவுறுத்தியுள்ளது.

Tags :
|
|
|