Advertisement

நடிகர் கவின் நடித்து வந்த படத்தின் டப்பிங் பணிகளை முடிவடைந்தது!

By: Monisha Thu, 30 July 2020 4:04:19 PM

நடிகர் கவின் நடித்து வந்த படத்தின் டப்பிங் பணிகளை முடிவடைந்தது!

தொலைக்காட்சி தொடர்களில் பரபரப்பாக நடித்து வந்த நடிகர் கவின், 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் ஹீரோவானார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கவின் ஒப்பந்தமான அடுத்த திரைப்படம் 'லிப்ட்'. அறிமுக இயக்குனர் வினீத் என்பவர் இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்பே முடிந்து விட்டது என்பதும் இந்த படத்தில் தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தில் நடித்த அம்ரிதா அய்யர் மற்றும் காயத்ரி ரெட்டி ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

actor kavin,lift film,dubbing,thriller story,post production ,நடிகர் கவின்,லிப்ட் படம்,டப்பிங்,திரில்லர் கதை,போஸ்ட் புரொடக்ஷன்

திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் நேற்றுடன் தனது பகுதியின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக நடிகர் கவின் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

'லிப்ட்' படத்தின் பெரும்பாலான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்துவிட்டதால் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்றும், மத்திய மாநில அரசுகள் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்தவுடன் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags :