Advertisement

சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாகிறது

By: Nagaraj Mon, 26 Oct 2020 2:00:06 PM

சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாகிறது

வரும் நவ.12ம் தேதி வெளியாகிறது...நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாகிறது.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

tribute to sura,film,nov. 12,biography,cinematography ,சூரரை போற்று, படம், நவ.12ம் தேதி, வாழ்க்கை வரலாறு, ஒளிப்பதிவு

நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வாழ்க்கை வரலாறு படமல்ல. சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் படத்தின் வெளியீடு திடிரென தள்ளிப்போனது.

இந்நிலையில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் நவம்பர் 12ஆம் தேதி சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது . அமேசான் ப்ரைமில் படம் வெளியாகும் நிலையில் சூரரைப்போற்று டிரைலர் இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags :
|