Advertisement

ஜெயம் ரவி நடித்த பூமி படத்தின் டிரைலர் வெளியாகியது!

By: Monisha Sat, 26 Dec 2020 5:15:18 PM

ஜெயம் ரவி நடித்த பூமி படத்தின் டிரைலர் வெளியாகியது!

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதிஅகர்வால் ஆகியோர் நடிப்பில் உருவாகிய 'பூமி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஞ்ஞானி ஒருவர் சொந்த ஊருக்கு வந்து அங்கு விவசாயிகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு கண்டு கொதித்தெழுந்து நடத்தும் போராட்டமும், அந்த போராட்டத்தை விவசாயிகளை அடிமையாக வைத்து அவர்களுடைய உழைப்பையும் பூமியையும் திருடும் ஒரு கார்ப்பரேட் வில்லன் அடக்க முயற்சிப்பதும் இறுதியில் வில்லனின் கூட்டத்தை ஹீரோ எப்படி அடக்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என இந்த ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

jayam ravi,earth,trailer,scientist,farmers ,ஜெயம் ரவி,பூமி,டிரைலர்,விஞ்ஞானி,விவசாயிகள்

விஞ்ஞானியாகவும் விவசாயி ஆகவும் மிகவும் ஆவேசமாக ஜெயம் ரவி நடித்துள்ளார். அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் தாய்நாட்டின் பற்று வெளிப்படுகிறது. படம் முழுவதும் ஆவேசமாக நடித்திருந்தாலும் அம்மா செண்டிமெண்ட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளும் அவருக்கு உண்டு என்பது டிரைலரில் தெரிகிறது. மொத்தத்தில் ஜெயம் ரவிக்கு இது ஒரு சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது

இந்த டிரைலரில் இடம்பெற்ற 'உன் மண்ணும் உன் அரசாங்கமும் எனக்கு அடிமை', 'நீ இந்த உலகத்தை எத்தனை ஆயிரம் உயரத்துல இருந்து பாத்துருப்ப, 7 லட்சம் கிமீ உயரத்துல இருந்து இந்த உலகத்தை பார்த்தவன் நான், எனக்கு இந்த உயரமெல்லாம் பயமில்லை' மற்றும் 'நான் தனியா இருக்கும்போதே என்னை உன்னால தடுக்க முடியலை, இப்ப என் மக்களும் என் கூட இருக்காங்க' போன்ற வசனங்கள் படத்திற்கு மேலும் வரவேற்பை அளித்துள்ளது.

Tags :
|